மாணவர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து தத்தம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் – சீமான்
============================
சல்லிக்கட்டு மீதானத் தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து உலகெங்கும் உள்ள நாம் தமிழர் உறவுகள் தத்தம் பகுதிகளில் நாளை 25.01.2017 புதன்கிழமை அன்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலம் நமது கண்டனத்தைப் பதிவு செய்வோம்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளைச் சுற்றியுள்ள நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து பேரெழுச்சியோடு நடத்திடுமாயின் கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சி வெல்லட்டும்!
—
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி