‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மன்னார்குடி

259

‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மன்னார்குடி
—————————
15-12-2016 வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு மன்னார்குடி, தேரடித் திடலில் ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவைப் போற்றுகிற வீரவணக்கப் பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்தியது. இந்நிகழ்வில், கடந்த 15-09-2016 அன்று, சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் உரிமை மீட்சிக்காக நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த எழுச்சிமிகுந்த காவிரி உரிமை மீட்புப் பேரணியில் தீக்குளித்து தன் இன்னுயிரை ஈகம் செய்த ஈக மறவன் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற பெரும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பா.விக்னேசுவின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
புகைப்படங்கள் பார்க்க https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCdFJZLUdEVURlVXc

நிகழ்வின் இறுதியாக சீமான் வீரவணக்கவுரையாற்றினார். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் மூத்த பொறுப்பாளர்கள், அனைத்து பாசறை செயலாளர்கள், உறுபினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளானோர் உணர்வெழுச்சியோடு பங்கேற்று அப்துல் ரவூப் மற்றும் விக்னேசு வீரவணக்கம் செலுத்தினர்.