26-10-2016 சீமான் தலைமையில் இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

26


26-10-2016 இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி
*********************************************************
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் இன்று 26.10.2016 புதன்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 400க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தடா.சந்திரசேகர், இராவணன், அன்பு தென்னரசன் மற்றும் சிவக்குமார் உள்ளிட்டோர் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து, அவர்களிடம் மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிடவும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்திடவும் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் பாசறை செயலாளர் அமுதாநம்பி, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், மாநில செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.