விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு முழு ஆதரவு

15

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு:

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று (13-10-2016) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், காவிரி நதிநீர் சிக்கலில் தமிழர்களின் தார்மீக உரிமையை நிலைநாட்டிட உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகமெங்கும் நடக்கவிருக்கும் தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியானது தனது முழு ஆதரவையும், போராட்டம் வெல்வதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

முந்தைய செய்தி13.10.2016 தியாகி சங்கரலிங்கனார் 60வது நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்
அடுத்த செய்தி17.10.2016 கவியரசு கண்ணதாசன் சிலைக்கு சீமான் மலர் வணக்கம் செய்கிறார் – தி.நகர்