26-09-2016 தியாகத்தீபம் நமது அண்ணன் திலீபனின் நினைவுநாள் – வீரவணக்கம்

39

தியாகத்தீபம் நமது அண்ணன் திலீபனின் நினைவுநாள் இன்று.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்!
உலகத்தாரின் ஆன்மாவையே உலுக்கிப்போட்டவன்!
12 நாட்கள் பசியையே ருசித்துக் கிடந்தான்!
இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்தவன்!
அந்த ஈக மறவனின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் அவன் எந்த உயர்ந்த இலட்சியத்தைக் கொண்டு தன் இன்னுயிரை ஈகம் செய்தானோ அந்த

இலட்சிய நோக்கை அடைகிறவரை அவன் வழிவழியே வருகிற வீரத்தமிழ் மானத்தமிழ் பிள்ளைகள்
உறுதியாக நின்று போராடுவோம் என்கிற அந்த நிலைப்பாட்டை நாம் ஏற்போம்!
நாம் தமிழர்!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை 26-09-2016 மாலை 5 மணிக்கு தியாகத்தீபம் நமது அண்ணன் திலீபனின் நினைவுநாளையோட்டி வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது

முந்தைய செய்திமுதல்வர் முழுமையாக உடல்நலம் பெற்று மீண்டுவர வேண்டும் – சீமான் வாழ்த்து
அடுத்த செய்தி26-09-2016 தியாகத்தீபம் திலீபன் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு