கயத்தாறில் பேருந்துகள் புறக்கணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

44

கயத்தாறில் பேருந்துகள் புறக்கணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

கயத்தார் ஊரை புறக்கணித்து புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்டித்தும், கயத்தார் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடமேற்கு மாவட்டம் (கோவில்பட்டி தொகுதி) இளைஞர் பாசறை சார்பாக கயத்தார் சுங்கச்சாவடி அருகே சாலை மறியல் போராட்டம் 19/08/2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்தை மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார், இணைச்செயலாளர் மகேந்திரபிரபு மற்றும் துணைச்செயலாளர் சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர் மாவட்ட செயலாளர் இராசேசு கண்ணா, மாவட்ட இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கயத்தார் தெற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, கயத்தார் ஒன்றிய தலைவர் கனகராசு கயத்தார் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சண்முக ராசு, கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன், இணைச்செயலாளர் விசயராசு, மற்றும் மூர்த்தி,ஆனந்த், சுடலைமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் இராசேசு கண்ணா அரசு பேருந்துகள் கயத்தார் ஊருக்குள் சென்று வர உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் (செய்தித்துறை அமைச்சர்) அலுவலகம் முன்பு விரைவில் கயத்தார் வியாபாரிகள், மக்கள் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

முந்தைய செய்திஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்து ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016
அடுத்த செய்திமதுரவாயல் தொகுதி – மேட்டுக்குப்பம் 148வது வட்டம் கொடி ஏற்ற நிகழ்வு