அமீரக நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வுக்கூட்டம் 18-06-15 அன்று துபாயில் நடைபெற்றது. இதில் அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் உறவுகள் வந்திருந்தனர். உறுதி மொழி எடுத்து புதிய உறவுகளின் அறிமுகங்களோடு சந்திப்பு ஆரம்பமானது.
பக்ரீத் பெருநாள் அன்று நமது அமைப்பின் சார்பில் நடைபெற இருக்கும் கபடி விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பங்களிப்பு சிறப்பாக நடைபெற்றது.
தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் தேசிய சிந்தனைகள் குறித்து நீண்ட நேரம் விரிவாக கலத்துரையாடல்கள் நடைபெற்றது. அடுத்த சந்திப்பை தைத் நகரில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி கூறி சந்திப்பு இனிதே நிறைவுற்றது.