இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு 15-06-15 அன்று சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நினைவெழுச்சியுரை நிகழ்த்தினார். மேலும், இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தடா சந்திரசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், நெல்லை சிவக்குமார், மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகப்பு கட்சி செய்திகள்