நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் கலந்தாய்வுக்கூட்டம் 06-04-15 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுக்க இருந்து மாணவர் பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் திருச்சியில் நடக்கவிருக்கிற இன எழுச்சி மாநாட்டில் மாணவர் பாசறையின் செயல்திட்டங்கள், பங்கு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் மாநில மாணவர் பாசறை நிர்வாகிகள் இரா.தேவா, தமிழீழம், பேராசிரியர் அருண்குமார், திருப்பூர் சுடலை, மா.செ.விக்னேசுவரன், கிளிண்டன் , இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாநில மாணவர் பாசறை நிர்வாகியாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த வெற்றிச்செல்வி நியமிக்கப்பட்டார்.
முகப்பு கட்சி செய்திகள்