பொய் வழக்கில் சிக்குண்டு சிங்கள சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வாடும் 5 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், பொய் வழக்கு புனையும் சிங்கள பேரினவாத அரசினை கண்டித்தும் கடந்த
08-11-2014 சனிக்கிழமை அன்று மாலை கும்பகோணம் மீன் சந்தை அருகில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பார்ட்டத்திற்கு நகரத்துணைச்செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். நகர இளைஞர் பாசறை செயலாளர்சக்திவேல் வரவேற்புரை ஆற்ற, நகரச்செயலாளர் மீ.ரகமதுல்லா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆதி.குமரவேல்,வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மோ. ஆனந்த், குடந்தை ஒன்றியச்செயலாளர் மணிக்கூண்டு சக்தி, திருப்பனந்தாள் ஒன்றியச்செயலாளர் அரவிந்த் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த ஆர்பார்ட்டத்தில் வழக்கறிஞர்.ஆதி.ரெத்தினவேல் பாண்டியன், தஞ்சை வடக்கு மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் வினோபா,, மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில்,மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர்.திருச்சி துருவன், தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட நகர,ஒன்றிய, அனைத்து பாசறை பொறுப்பாளர்கள் உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். நகர இளைஞர் பாசறை துணைச்செயலாளர் லிங்கதுரை நன்றி கூறினார். இந்த ஆர்பார்ட்டத்தில் ராஜபக்சே உருவப்படம் தீயிலிட்டு எரிக்கப்பட்டது.