தமிழ் மீனவர்கள் மீதான மரண தண்டனைத்தீர்ப்பைக் கண்டித்து ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

111

தமிழ் மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவை மீட்காமல் மீனவர்களை தொடர்ந்து இலங்கைக்கு பலிகொடுக்கும் மத்திய  அரசை கண்டித்தும் ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம்  முன்பு 04/11/2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் செயராசு தலைமை வகித்தார். நகர செயலர் லோகு.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

 

முந்தைய செய்திநம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது
அடுத்த செய்திதேசிய இனங்கள் சங்கமித்த சீக்கிய இனப்படுகொலை 3௦ஆவது வருட நினைவேந்தல் பேரணியில் புதுதில்லியில் நாம் தமிழர் கட்சி