சேலம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

81

16.11.2014 சேலம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மேட்டூர் கட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மே.து.சரவணன் தலைமை தாங்கினார். மேட்டூர் நகர செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் மேச்சேரி வெங்கடாசலம் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் தீபக் குமார், மா. சீராளன், தமிழ் மாறன், முருகேசன், யுவராஜ், தினேஷ், மற்றும் மேட்டூர் நகர தலைவர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கீழ் கண்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

1. தேசிய தலைவர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
2. பால் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்,
3. கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மீனவர் பழனியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,
4. இந்த வழக்கினை மத்திய புலன்விசாரணை பிரிவிற்க்கு மாற்ற வேண்டும்.
5. மீனவர் பழனியின் 3 குழந்தைகளையும் அரசு தத்தெடுக்க வேண்டும்,
6. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயலும் கர்நாடக அரசு தனது முடிவை திரும்பப்பெற வேண்டும்,
7. காவிரி உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளுக்கு அந்த நீர் செல்லும்படியான வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.