தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

9
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்  01/10/2014 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது
இதில் மாவட்ட தலைவர் மா.புங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூ.பாண்டி,
செயபாசு மாவட்ட பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.அருண்குமார் ,முதுவேல்ராசா ,மகேசு, முத்துக்குமார் ,பாலாஜி , விஜயராஜ் ,சுகன் , பழனி,சிங்கம் ,மணி ,மூர்த்தி ,பிரபாகரன் ,தங்கமாரியப்பன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்குபெற்றனர்.

தீர்மானங்கள்:

1. ஐநா .விசாரனைக்குழுவை குழுவை தமிழ்நாட்டில் ஏதிலிகளாக உள்ள உறவுகளிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்

2. சிறப்பு முகாம் பேரில் உள்ள சித்திரவதை முகாமை மூட வேண்டும்

3.வடக்கு மாவட்டம் சார்பாக மாதம் தோறும் தெருமுனை கூட்டம் நடத்த வேண்டும்

4. வடக்கு மாவட்ட நகர கிளை ,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை துரித படுத்தவேண்டும்

5.தேசிய தலைவர் பிறந்த நாளை ஒட்டி குருதிக்கொடை முகாம் நடத்த வேண்டும்

செய்தி:
மு.மாரிமுத்து,
செய்தி தொடர்பாளர்