தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை நகரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

18
நாம் தமிழர் கட்சி கழுகுமலை நகர கலந்தாய்வு கூட்டம் 05/10/2014 அன்று  நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை  செயலாளர் பா.அருண்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.

விவாதிக்கப்பட்ட செய்திகள் :

1. கழுகுமலையிலுள்ள 14 பகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை 10 நாட்களுக்குள் நியமிக்க இலக்கு நிர்ணயிப்பது
2.கட்சியின் நிதி ஆதாரத்தை பெருக்க மாதம்தோறும் சந்தா வசூலிப்பது. குறைந்த பட்சம் நிர்வாகிகளுக்கு  உரூபா 100-யும், உறுப்பினர்களுக்கு  உரூபா 50-யும் வசூலிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது
3.ஒவ்வொரு பகுதியில் உள்ள சமூக பிரச்சனைகள் தொடர்பான அறிக்கை தயாரிக்க முடிவு செய்வது

4.மாதம் ஒரு பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது .

செய்தி:

மு.மாரிமுத்து,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செய்தித்தொடர்பாளர்