முறையில்லா பேருந்து கட்டணம் -போக்குவரத்து அலுவலர்,கோட்டாச்சியர் உதவியாளர்களிடம் முறையீட்டுமடல் கையளிக்கப்பட்டது.

118

முறையில்லா பேருந்து கட்டணம்

கோபி நகரில் இருந்து புதுக்கரைப்புதுர்-கூகலூர்-தண்ணீர்பந்தல் வழியில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் தினமும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தில் 4ரூ கட்டணமாக உள்ளபோதும் தனியார் பேருந்தில் 5ரூ பெறப்படுகிறது.

தனியார் பேருந்து நடத்துனரிடம் முறையில்லா கட்டண நிர்ணயம் குறித்து விளக்கம் கேட்ட பொதுமக்களை சிறுமைப்படுத்தப்பட்டனர்.

பொதுமக்களின் விருப்பத்திற்கு இனங்க இன்று ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர்/RTO மற்றும் கோபி கோட்டாச்சியர் உதவியாளர்/Sub Collector’s Secretary அவர்களிடம் நமது முறையீட்டுமடல் கையளிக்கப்பட்டது. சரியான நடவடிக்கை எடுக்கப்படாத போது தனியார் பேருந்து சிறை பிடிக்கப்படும்.

கலந்துகொண்ட தோழர்கள் ;விசயசங்கர்,நிரஞ்சன்,மணிவண்ணன்,கருணாமூர்த்தி,ஹரிஹரன்,பொதிகை சுந்தர்,விஜய்,சிகேந்தர் ,உட்பட பலர்.