குன்னூரில் கொள்கைவிளக்க கூட்டம் 06.07.2014 அன்று நடைபெற்றது.

55

“தமிழின மீட்சியே நாம் தமிழர் எழுச்சி”  கொள்கைவிளக்க கூட்டம்  குன்னூரில் அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில். மாவட்ட செயலாளர் பேராசிரியர் பா.ஆனந்த்,மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் மருத்துவர் பாலசுப்ரமணியம்,மாநில மாணவர் பாசறை பொறுப்பாளர் திரு.இடும்பாவனம் கார்த்திக்,மாவட்ட பொருளாளர் திரு.சிவகுமார்,கூடலூர் நகர செயலாளர். திரு.பைந்தமிழ் பாரதி,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு.உதயன்,உதகை சட்டமன்ற அன்றோர் அவையம்  திரு. எட்வின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தின் தீர்மானங்கள்:

௧) தூதூர்மட்டம் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் வழங்கப்பட்ட பட்டா நிலங்களில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் செய்யமுடியவில்லை.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பட்டா நிலங்களில் வளர்ச்சி பணிகள் செய்ய உதவிட வேண்டும்.

௨)குன்னூர் காந்திநகர்,தூதூர்மட்டம் பகுதியில் குடிநீர் தட்டுபட்டினை அரசு தலையிட்டு போக்கிட வேண்டும்.

௩) தூதூர்மட்டம் பகுதியில் மக்களுக்கும்,பள்ளி குழந்தைகளுக்கும்,இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.

 

முந்தைய செய்திதூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.
அடுத்த செய்திதேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.