சேலம் மாவட்டம் ஓமலூரில் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

128

இனமான இயக்குனர், நாம்தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி எங்கள் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம்.

 

மொழிக்காகவும் இனத்திற்காகவும் அதன் உரிமைகளுக்காகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சூழலிலும் கூட களத்தில் நின்று போராடியவர்… நான் இறந்தபிறகு தமிழர்களின் தேசியக்கொடியான புலிக்கொடியை என் உடலில் போர்த்த வேண்டும்.. சொந்தம் என்று சொல்லி வருபவர்களை காரியம், கருமாதி என்ற பெயரில் செய்யவிடாமல் எனது பிள்ளை எனது தலைவன் சீமானிடம் எனது உடலை ஒப்படைத்துவிடுங்கள் என சொன்னவர். தேசியத்தலைவரால் அன்பு பாராட்டப்பட்டவர். அய்யா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் சி.அருண் தலைமையில் 15.06.2014 ஞாயிறு அன்று மாலை 4 மணி அளவில் சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.