இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்

47

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் நகர கூடம் (town hall) முன்பு 25.05.2014 அன்று மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

2008 – 2009ல் தமிழ் ஈழ மண்ணில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை என்கிற உண்மை, உள்ளத்தை உருக்கும் ஆதாரங்களுடன் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. 12 வயது இளம்பிள்ளையைக் கூட சிங்கள இனவெறியர்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது உலகு. மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உலகின் எதிர்ப்பைச் சந்தித்த இலங்கை, சர்வதேச  விசாரணையிலில் மாட்டியிருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ச அவர்கள் இந்திய பிரதமர் பதவியேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இனப்படுகொலை செய்த இலங்கை அரசு தலைவர் இந்தியா வருவதை, கடுமையாக நாம் தமிழர் எதிர்க்கிறது

முந்தைய செய்திஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்