கடலூர் மாவட்டம் (கிழக்கு) சின்னப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.

273

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் திருநாள் விழா பண்ருட்டி வட்டம் சின்னப்பேட்டை கிராமத்தில் 14.01.2014 அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயப் போட்டியும் நடைபெற்றது. வீடுகளில் கோலமிடுவதோடு கட்டாயம் கோலத்துடன் திருக்குறள் ஒன்று எழுதப்பட்டிருத்தல் வேண்டும் என்பதால் அனைவரின் இல்லத்திலும் கோலத்தின் அருகில் திருக்குறள் ஒன்று எழுதப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கோலப்போட்டியில் கலந்துகொண்டனர். சிறுவர் சிறுமியருக்கும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. விழாவுக்கு கடலூர் மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேலன் தலைமை தாங்கினார். பண்ருட்டி நகர ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் பரிசளித்து எழுச்சியுரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  சாமிரவி, கடலூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கடலூர் நகர ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, பண்ருட்டி  ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், அண்ணாகிராம ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ராமதாசு, வீரகண்டமணி, அங்குசெட்டிப்பாளையம் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கணேசன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை விநோத், தயாளன், சந்தோஷ், சுதாகர், லோகு ஆகியோர் செய்தனர்.