முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்

42

தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை சட்டத்திற்கு புறம்பான வழியில் அநீதியாக தகர்த்த தமிழக அரசை கண்டித்தும், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.அ.நல்லதுரை உள்ளீட்ட 81 போராளித் தமிழர்கள் மீது தமிழக அரசின் காவல் துறை பதிந்துள்ள கொலைமிரட்டல் உள்ளீட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற்று, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய  வலியுறுத்தியும் தஞ்சை மாவட்டம் சார்பில் தஞ்சாவூர் தொடர் வண்டி நிறுத்தத்தில்  15-11-2013 அன்று மாலை 5 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மத்திய மாவட்டச்செயலாளர் தர்ம பாலா முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்டச்செயலாளர் தென்றல் சந்திர சேகர் , நாம் தமிழர் கட்சியின் தஞ்சை வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் முகுந்தன், மாவட்ட இணைச்செயலாளர் வழக்கறிஞர் கருணாநிதி , முன்னாள் மாவட்டச்செயலாளர் சதா.முத்துகிருஷ்ணன், வல்லம் ஒன்றியசெயலாளர் கரிகாலன், தஞ்சாவூர் மத்திய மாவட்டச்செய்தி தொடர்பாளர் சுடரொளி,பூதலூர் ஒன்றியச்செயலாளர் அற்புதராஜ் , திருவாரூர் மாவட்ட இணைச்செயலாளர் கந்தன்,வடுவூர் முருகேசன், தகவல் தொடர்பு கும்பகோணம் நகரச்செயலாளர் மீ.ரகமதுல்லா, தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆதி.குமரவேல், அய்யம்பேட்டை தூயவன் ,சிபி, சதீஷ்குமார் மற்றும் மாணவர் பாசறை ,இளைஞர் பாசறையை சேர்ந்த தம்பிகளும் ,நாம் தமிழர் கட்சினரும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துக் கொண்டனர். முள்ளிவாய்க்கால் முற்ற சுற்றுச்சுவரை இடித்த தமிழக அரசிற்கு எதிராகவும் ,பொய் வழக்கு புனைந்துள்ள தமிழக காவல்துறைக்கு  எதிராகவும் முழக்கங்கள் இடப்பட்டன.

முந்தைய செய்திசிவகிரியில் கொட்டும் மழையில் நடந்த பட்டினிபோராட்டம்.
அடுத்த செய்திதமிழர் தேசிய திருவிழா