மும்பையில் அண்ணன் திலீபனின் நினைவு நாள் நிகழ்ச்சி!!

19

நாம் தமிழர் கட்சி சார்பில் கேணல் திலீபனின் 26-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது.

மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பில், இலங்கையில் தமிழீழம் மலர அகிம்சை வழியில் போராடிய கேணல் திலீபனின் 26-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது.கேணல் திலீபனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அவரது உருவப்படத்தின் முன் மெழுகுவர்த்தியும், குத்துவிளக்கும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. இரங்கல் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஜெயசீலன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கென்னடி, கணேசன், பொன்.கருணாநிதி, ரவி, கருணா, ஏ.பி.சுரேஷ், எஸ்.எஸ்.தாசன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெல்ஜியத்தில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கேட்கேட்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
அடுத்த செய்தி29.09.13 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற கொள்கை விளக்க பரப்புரை கூட்டம்!!