காமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி 27-10-2013 காலை 10 மணிக்கு காந்திபுரம், தமிழ்நாடு உணவகம் முன்பு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்…

34

காமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி நேற்று (27-10-2013) காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மண்டல செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், போக்குவரத்து சங்க நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என கோஷம் எழுப்பினார்கள்.