இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் சாகும் வறை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை அண்ணன் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

16

இன்று (02.10.2013) கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு போராட்டத்திர்க்கு செல்லும் முன், இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் சாகும் வறை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

மேலும், “தமிழீழ மக்கள் இனப் படுகொலைக்கு நீதி கோருவதற்கான போராட்டம் ஒரு திருப்புமுனைக் கட்டத்தை எட்டியுள்ள இவ்வேளையில் கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் கொலைகாரன் ராஜபக்சேயை குற்ற நீக்கம் செய்து புனிதனாகக் காட்டும் முயற்சியில் இந்திய அரசும் வேறு சில உலக அரசுகளும் ஈடுபட்டுள்ளன. அதற்கான அற வலிமை தமிழர்களாகிய நமக்குண்டு என தோழர் தியாகு நம்மைப் போலவே உறுதியாக நம்புகிறவர்.

வெற்றி அல்லது வீரச் சாவு! இது இப்போராட்டத்தின் உறுதியான முழக்கம். இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற தமிழினத்தின் உறுதியை உள்வாங்கி இம்முழக்கம் வெளிப்படுத்துகிறது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி இயன்றதனைத்தும் செய்யும். அதேபோல மாணவர்களும், தமிழ்ச் சொந்தங்களும், உலகத் தமிழ் உறவுகளும் ஆவதவளிக்க உரிமையோடு வேண்டுகிறேன்.” என்றார்.

இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் “காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது, நடந்தால் இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் அரசுகள் அதில் பங்கேற்கக் கூடாது” என வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அக்டோபர் 1ஆம் நாள் முதல் இறுதி வரை உணவு மறுப்புப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கினார். இந்தக் கோரிக்கை உட்பட ஒன்பது முதன்மையான கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெறுகிறது என்பது கூறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திதமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்கள் – சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஊடக இல்லம்
அடுத்த செய்திமெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை