3 ஆம் இணைப்பு வடக்கில் மலர்ந்தது தமிழர் ஆட்சி: கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!

16

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.

முழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் 7 ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது.

வவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது. யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது. மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன. வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது.

<*> யாழ் மாவட்டம்

* சாவக்கச்சேரி தேர்தல் தொகுதி

இலங்கை தமிரசுக்கட்சி 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,193
ஐக்கிய தேசியக் கட்சி – 89
செல்லுப்படியான வாக்குகள் 27,415
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,378
அளிக்கப்பட்ட வாக்குகள் 29,793
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 49,479

* பருத்தித்துறை தேர்தல் தொகுதி

இலங்கை தமிரசுக்கட்சி – 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,953
ஐக்கிய தேசியக் கட்சி – 26

செல்லுப்படியான வாக்குகள் 21,038
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,444
அளிக்கப்பட்ட வாக்குகள் 22,482
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 35,054

* கோப்பாய் தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசுக்கட்சி – 26,467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,386
ஐக்கிய தேசியக்கட்சி – 127

* மானிப்பாய் தேர்தல் தொகுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 28,210
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 3, 898

* வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசு கட்சி – 23442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3763
ஐக்கிய தேசியக் கட்சி – 173

* ஊர்காவத்துறை தேர்தல் தொகுதி

தமிழ் தேசிய கூட்டமைப்பு ……8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி …….4164

* யாழ்.தேர்தல் தொகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 16421 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2416 ஐக்கிய தேசியக் கட்சி – 60

*நல்லூர் தேர்தல் தெகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 23733 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2651 ஐக்கிய தேசியக் கட்சி – 148

* உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 18855 ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2424 ஐக்கிய தேசியக் கட்சி – 57

<*> முல்லைத்தீவு மாவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு …..28266 …4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ……7209 ..1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ……..199
ஜக்கிய தேசிய கட்சி …….197

<*> கிளிநொச்சி மாவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ……37079…….3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி …….7897……..1 ஆசனம்

<*>மன்னார் மாவட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 33,118 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 15,104 (1 ஆசனம்)
முஸ்லிம் காங்கிரஸ் – 4471 (1ஆசனம்)
ஐக்கிய தேசியக் கட்சி – 180

<*> வவுனியா மாவட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 41,225

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,633

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,991

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 62,365

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4,416

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 66,781

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94,644

இலங்கை தமிழரசுக் கட்சி – 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 ஆசனங்கள்

முந்தைய செய்திஓநாயை உள்ளே விடாதீர்கள் விக்கி! புகழேந்தி தங்கராஜ்
அடுத்த செய்திஈ.பி.டி.பியினர் தீவகத்தில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!