தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 109–வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆவல் கணேசன், அன்பு தென்னரசன், அமுதா நம்பி, தங்கராசு, கதிர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் பாகை வேந்தன், திருமலைராஜா, சுமித்ரா, செங்கொடி உள்பட கட்சி நிர்வாகிகள் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் சிலை முன்பு வீர வணக்கம் செலுத்தி, கோஷம் எழுப்பினர்.
முகப்பு கட்சி செய்திகள்