தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி சாகும்வரையில் உண்ணாவிரம் -சட்டவாளர் அங்கயற்கண்ணி!

25

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பகவத்சிங்,வேல்முருகன் ஆகியோர் அங்கயற்கண்ணிக்கு ஆதரவாக தமிழ்உயர்நீதிமன்ற மொழியாவதை தடுக்கதே என்ற கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

அவர் வைத்த கோரிக்கைகள்..

அங்கயற்கண்ணி (கயல்விழி) அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்

நடுவண்அரசே தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரும் 2006ஆம் அண்டு சட்டமன்ற தீர்மானத்திற்கு உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதலை வழங்கு.

உயர்நீதிமன்றங்களின் மொழி ஆங்கிலம் என்றிருப்பதை அந்தந்த மாநிலத்தின் பாவனை மொழியே உயர்நீதிமன்றங்களில் மொழியென மாற்று

மெட்றாஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்று
தமிழக அரசே உயர்நீதிமன்றங்கள் மற்றும் கிழைநீதிமன்றங்களில் அனைத்திலும் அரசு வழக்கறிஞர்கள் தமிழில்தான் வாதிடவேண்டும் என்று உத்தரவிடு.

உச்சநீதிமன்றமே தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்உயர்நீதிமன்ற மொழியாவதை தடுக்காதே.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சட்டவாளர்அங்கயற்கண்ணி உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற தமிழ் என்ற குறும்பட வெளியீட்டு நிகழ்வில் தமிழைபற்றி சட்டவாளர் அங்கயற்கண்ணி ஆற்றிய உரை

முந்தைய செய்திவவுனியாவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் உள்ளிட்ட 50பேர் கைது!
அடுத்த செய்திமனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை