இலங்கை கடற்படையினர் தாக்கினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்- தமிழக மீனவர்கள்

228

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு வழங்கத் தவறினால் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை இராணுவத்தினரிடம் இருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து, தற்காத்துக்கொள்ள, அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுகின்றனர். இது தொடர்பில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், மத்திய அரசை கண்டித்து எதிர்வரும் 20 ஆம் திகதி பல்வேறு மீனவ இயக்கங்கள் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன போராட்டம் ஒன்றை நடத்த தீர்மாணித்துள்ளதாக என தமிழக மீனவ சங்கங்கள் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்திஇனஅழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணம்!
அடுத்த செய்திசெம்மொழி மாநாட்டில் 200 கோடி ரூபா ஊழல்! – கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீது விசாரணை.