வெளிநாட்டுத் தூதர்கள் வடக்கு மாகாணம் செல்ல தடை – தேர்தல்கள் ஆணையாளர்

11

வடக்கு மாகாணத்துக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு வெளிநாட்டுத் தூதர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் நோர்வே தூதர்கள் வடமாகாணத்துக்குப் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளனர்.   வட மாகாண மாவட்டச் செயலர்களைச் சந்திக்க அனுமதியளிக்குமாறு குறித்த தூதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், இந்தக் கோரிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.   வட மாகாணத் தேர்தல் குறித்து ஆராயும் நோக்கில் அவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கை வெளி விவகார அமைச்சின் ஊடாக தேர்தல்கள் திணைக்களத்திடம் விடுக்கப்பட்டுள்ளது.   மிகவும் அத்தியாவசியமான தேவை ஒன்றுக்காகச் சந்திப்பு நடத்தப்பட்டால் அது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையிலேயே நடைபெற வேண்டும் என்று மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்திதமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற செந்தில் குமரனின் வார்த்தையயை வெல்லவேண்டும் -றாஜமனேகரன்!
அடுத்த செய்திதமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை தாயகத்திற்கு அழைக்கும் சிறீலங்காவின் திட்டம்!