வடக்கு தேர்தலில் இராணுவத்தினர் செயற்பட்ட விதம் குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அதிருப்தி!

26

இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தென் ஆசிய பிராந்திய வலயத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வட மாகாணசபைத் தேர்தலின் போது இராணுவத்தினர் செயற்பட்ட விதம் குறித்து அதிருப்தி அடைவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு இலங்கை விஜயம் செய்திருந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

துண்டுப் பிரசுர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஒரு சில சம்பவங்களைத் தவிர தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றது என முன்னாள் இந்தியப் பிரதம தேர்தல் ஆணையாளர் என்.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர் மக்களில் 26 வீதமானவர்கள் மட்டுமே தேர்தல்களில் வாக்களித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நிகழ்ந்த துரதிஸ்டம்
அடுத்த செய்திஇலங்கை அரசு வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்