முள்ளிவாக்காலில் மக்கள் விட்டுசென்ற சொத்துக்கள் படையினரால் விற்பனை!

35

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் கைவிட்டுச் சென்ற பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உரியவர்களிடம் மீளவும் முழுமையாக கையளிக் கப்படாத நிலையில் அவை படையினரால் விற்பனை செய்யப்படுவது மிகவும் மோசமான நடவடிக்கை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா வடக்கு ப.நோ.கூ சங்கத்திற்குச் சொந்தமான பாரவூர்த்தி ஒ ன்று யாழ்.கொட்டடி பகுதியில் வைத்து மீட்கப்பட்டிருந்தது. இந்த பாரவூர்தி 2009ம் ஆண்டு 4ம் மாதமளவி ல் மாத்தளன் பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ளது. பின்னர் அது யாழ்.பலாலி பிரதேசத்திலிருந்து படையினரா ல் தனியார் ஒருவருக்கு பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாராவூர்தியில் மேற்படி ப.நோ.கூ சங்கத்தின் பெயர் மற்றும் விலாசம் பொறிக்கப்பட்டிருந்தபோதும் அ தனை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் பழைய இரும்புக்காக விற்கப்பட்டிருக்கின்றது. மேலும் விற்பனை n சய்தமைக்கான பற்றுச் சீட்டும் வாங்கிய தனியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே இது மிகவும் மே hசமான நடவடிக்கையாகும்.

போர் நிறைவடைந்ததன் பின்னர் மக்களுடைய சொத்துக்களுக்கும், வாகனங்களுக்கும் படையினரே பொறுப் பாளிகள். ஏனெனில் போர் இடம்பெற்ற பிரதேசங்களில் மக்கள் யாரும் இருக்கவில்லை, படையினரே இரு ந்தனர். எனவே படையினரே அனைத்திற்கும் பொறுப்பாளிகள். ஆனால் படையினர் தங்கள் பொறுப்புக்கi ள உதறித்தள்ளிவிட்டு.

மக்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதும், மக்களை பாதுகாப்பதும், நாட்டை பாதுகாப்பதுமே படையினரின் பொறுப்பு என கூறும் அரசாங்கம் அதனால் படையினரை பாதுகாப்பு படையினர் என்றும் அழைக்கின்றது. ஆனால் அவர்கள் மக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்கின்றார்கள். மக்கள் பலர் எங்களிடம் கூறியிருக்கின்றார்கள்.

முதல் நாள் பார்த்த வாகனங்கள் மறு நாள் அந்த இடத்தில் இல்லை. அதேபோன்று போரின் இறுதியில் மக்கள் கைவிட்டுச் சென்ற நகைகள், பெறுமதியான பொருட்கள் அனைத்தும் மக்களோ, பாராளுமன்ற உ றுப்பினர்களோ செல்ல அனுமதிக்கப்படாத அந்தக் காலத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட பாராவூர்த்திகளில் இரவு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

அவை எந்தவொரு இராணுவச் சோதனைச் சாவடிகளிலும் சோதனைக்குட்படுத்தப்படவில்லை. எனவே மக் களுடைய சொத்துக்களை சூறையாடி பல படை அதிகாரிகள் செல்வந்தர்களாக மாறிவிட்டார்கள். எனவே மக்களுடைய இழப்புக்களுக்கு படையினரும், அரசாங்கமும் நஷ்டஈடு வழங்கவேண்டும். இந்த விடயத்தை நாங்கள் ஆதாரங்களுடன் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளோம். என்றும் அவர் மேலும் கூறினார்.

முந்தைய செய்தியாழ் கைதடியில் வடமாகாண சபைக்கான கட்டடம்!
அடுத்த செய்திநவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு இனஅழிப்பினை பர்த்துக்கொண்டிருந்த நாடுகள் வரவேற்பு!