முல்லைத்தீவில் கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்!

33

முல்லைத்தீவு பகுதியில் கூட்டமைப்பின் வேட்பாளரின் வீட்டின்மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்காங்கே காவல்துறையினர் மற்றும் படைகாவலரண்கள் காணப்படும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் மரியாம்பிள்ளை அன்ரனிஜெகநாதனின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்னாள் சனிக்கிழமை அவர் குடும்பத்துடன் அருகில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற நிகழ்விற்கு சென்றவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை தாயகத்திற்கு அழைக்கும் சிறீலங்காவின் திட்டம்!
அடுத்த செய்திதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் தனிநாட்டினை கோரவில்லை – இரா.சம்மந்தன்