மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் மாவீர்ர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பதற்கு, புதிதாக தெரிவாகியுள்ள வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிட்டியுள்ளது. எனினும், இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மாவீர்ர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டால், தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
முகப்பு தமிழீழச் செய்திகள்