மக்களுடைய ஜனநாயக தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்கவேண்டும்

25

வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பு மிகவும் தெளிவாக வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் பாதுகாப்பாகவும், சுயமரியாதை மற்றும் கௌரவத்துடன் போதிய சுயாட்சியினை தமிழர்கள் பெறுவதுடன், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார அபிலாஷைகளை அடை வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.

பல்வேறுபட்ட துன்புறுத்தல்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டபோதும் மிகவும் தெளிவாகவும், துணிவுட னும் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எனவே மக்களுடைய இந்த ஜனநாயக தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்பதோடு கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த அனைவருக் கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்திருக்கின்றது.

யாழ்.நகர விடுத்தி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், வட மாகாண சபை தேர்;தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒரு வரும் அடையாத அமோக வெற்றியீட்டியுள்ளது. வடமாக hணத்தில் ஏறத்தாள 80 வீதமான ஆசனங்க ளையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏறத்தாள 90 வீதமான ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகவும் தெளிவானதாக உள்ளது. ஐக்கிய, பிளவுபடாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும், சுயமரியாதையோடும், கௌரவமாகவும், போதிய சுய ஆட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, அபிலாசைகளை அடைய விரும்புகிறார்கள்.

இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செற்படும் அதே வேளையில்,

அரசாங்கமும் அதனது பங்களிப்பை முழுமையாகச் செய்யும் என்று எதிர் பார்க்கிறோம். இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கி றார்கள். இந்தத் தேர்தலில் தாம் சந்திக்க நேர்ந்த பலவிதமான துன்புறுத்தல்களின் மத்தியிலும் வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தெளிவாகவும்

துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென நாம் வற்புறுத்திக் கேட்கிறோம். எமது மக்கள் முழுமையாக எம்மை ஆதரித்ததற்காக எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், அவர்கள் தமது அபிலாசைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார்.

தொடர்ந்து வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தியமை மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டியிருப்பதாக அரசாங்கம் பிரசாரம் செய்கிறதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு. வடக்கு முதலமைச் சர் சீ.வி.விக்னேஷ்வரன் பதிலளிக்கையில், வடக்கு தேர்தல் பிரச்சினைகள் இல்லாமல் இடம்பெறவில்லை. மேலும் தேர்தலை நடத்தவிடாது தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் அனைவருக்கும் தெரியும்

ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திவிட்டதாக அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொள்ளுமாக இருப்பின் தேர்தலில் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பிற்கும் இலங்கை அரசாங்கம் மதிப்பளித்து மக்களுடைய தேவைகளையும், அபிலாஷைகளையும் நிறைவு செய்யவேண்டும். என பதிலளித்தார்.

இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையை கைப்பற்றியுள்ள நிலையில் யுத்தத்தில் இறந்துபோனவர்களின் நினைவிடங்கள் மீள அமைக்கப்படுமா? மக்களின் உணர்வுகள் மதிக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் பதிலளிக்கையில், ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் இதற்கு எம்மால் பதிலளிக்க முடியாது.

உங்களால் ஒரு மாகாண அரசு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அதனை ஒரு தீர்மானமாக மாகாணசபையில் கொண்டுவருவதன் மூலம் அது பரிசீலிக்கப்படலாம். ஆனால் தமிழ் மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். மக்களுடைய உணர்வுகளை புரிந்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நாம் நடந்து கொள்வோம்.

வடக்கு மாகாணசபை இந்தியாவிடமிருந்து எவ்வாறான உதவிகளை எதிர்பார்ப்பதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பதிலளிக்i கயில், எங்கள் பிரச்சினைகளில் இந்தியா அதிக கவனம் கொண்டிருந்தது. சில காலம் எங்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் பார்வையாளராக இருந்தது.

தற்போது மீளவும் எங்கள் பிரச்சினையில் அது தலையிடுகின்றது. மேலும் இந்திய அரசின் கருத்துக்களுக்கு சர்வதேச மட்டத்தில் ஒரு மதிப்பு இருக்கின்றது. எனவே இந்தியாவின் உதவியினை நாங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம். மாகாணசபைகளுக்கு எதிராக ஒரு சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது கூட இந்தியா தலையிட்டு அதனை பிற்போட்டியிருக்கின்றது.

இதேபோன்று தமிழக மக்கள் எங்களுடைய பலம். நாம் அவர்களிடம் கேட்பது எங்கள் பிரச்சினையில் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள். அவ்வாறு முன்வந்தால் அதன் மூலம் தமிழர்கள் அடையும் பலாபலன்கள் அதிகம் இதேபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் எங்கள் பிரச்சினை எடுத்துச் செல்லப்படவேண்டும் என்றார்.

முந்தைய செய்திதம் இனத்தை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடமே வட மாகாணத் தேர்தல் முடிவு: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதேசத்தின் விடுதலையை மக்கள் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேசிக்குமா?