பெரியாரின் திரு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

37

இன்று (17/09/2013) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக மாங்காடு பகுதியில் அவரது திரு உருவ சிலைக்கும், கொள்ளிமானகரில் அவரது உருவ படத்திற்கும் மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாங்காடு பகுதி ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், கொள்ளிமாநாகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சரத், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் பாரதி, காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் ஆ.ச.திருமலை, காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் ராசேந்திரபிரசாத், மாவட்ட இளைஞர் பாசறையின் செயலாளர் இராவணன், மாவட்ட மாணவர் பாசறையின் செயலாளர் சுபாசு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.