நவநீதம்பிள்ளையை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர் பாதர் யோகேஸ்வரவரனக்கு எதிராக துண்டுப்பிரசூரம்

7
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர் பாதர் யோகேஸ்வரனை தனிப்பட்ட ரீதியாக மனித உரிமை ஆணையாளர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அவ்வாறு சந்தித்த பாதர் யோகேஸ்வரனுக்கு எதிராக சிங்களத்தில் எழுதப்பட்ட பெருமளவான துண்டுப்பிரசூரங்களை வெளியிட்டுள்ளதுடன், அவரின் வீட்டின் முன்பாகவும் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
அதில் நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவும்;, பெரிய வீடு கட்டி வசித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான சதிகளில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன். பல எதிரான சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வந்த நவநீதம்பிள்ளை கடந்த மாதம் 28 ஆம்; திகதி திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு ஆளுநர், முதல்மைச்சர், அரசாங்க அதிபர்கள் என சந்திப்பக்களை மேற்கொண்டதுடன், திருகோணமலை மாவட்டத்தின் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடிருந்தார்.
இவர் ஜேசு சபையில் பாதர்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சட்டத்தரணியாக கடந்த 1985 ஆம் ஆண்டிருந்து மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளை கையாளுவதுடன், காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் வழக்குகளை நடாத்தியுள்ளார்.
மனித உரிமை ஆணையாளரை சந்தித்த பின்னர் இவரை இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசினுடாக விளக்கம் கோரியுள்ளனர். எனினும் தான் நடந்தவற்றை உண்மையானவற்றை தெரிவித்ததாக தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர்தான் கடந்த 14-09-2013 இரவு இந்த துண்டுப் பிரசூரம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், மறுநாள் 15ஆம் திகதி இவரின் வீட்டுக்குச் சென்ற புலனாய்வுத்துறையினர் மற்றும் பொலிஸார் வீட்டில் வீசப்பட்டிருந்த துண்டுப் பிரசூரங்களை சேகரித்துச் சென்றதுடன், ஒட்டப்பட்டிருந்தவற்றை அகற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.