நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்: மகிந்தவிடம் சொன்னாராம் பான் கீ மூன்..!

21

இலங்கையில் எஞ்சியுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, பான் கீ மூன் சந்தித்து பேச்சுக்களை நடாத்திய போதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அதன்போது, யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நடவடிக்கைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இலங்கைக்குமான உறவுகள் குறித்தும் இதன்போது போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரை அமுலாக்கம், மாகாணசபைத் தேர்தல்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பன குறித்தும் மேலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு தமிழ் மக்கள் அளித்த அங்கீகாரத்திற்கு நன்றிகள்: – சுரேஷ் க. பிரேமச்சந்திரன்
அடுத்த செய்திஇலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்படும்: நவிபிள்ளை எச்சரிக்கை!