தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற செந்தில் குமரனின் வார்த்தையயை வெல்லவேண்டும் -றாஜமனேகரன்!

163

பிரித்தானியாவில் ஈகைப்பேரெளி செந்தில்குமரின் வணக்க நிகழ்வில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் கந்தையா றாஜமனேகரன் அவர்கள்தெரிவித்துள்ளார்.

தமிழினம் ஒருகையறு நிலையில் இருக்கின்றது எதுவும் செய்யமுடியாத ஒருஅந்தரம் இதேன நிலை தொடருகின்றது நாங்கள் சோர்ந்தாலும் அவர்கள் சோர்வதில்லை என்றநிலையில் சிங்களம் இருக்கின்றது.
60களில் இருந்து இந்த தேர்தல்களை பார்த்துவிடுகின்றேன் தோர்தல் ஒரு பூச்சாண்டி அன்றுதொடக்கம் இன்றுவரையில் காணப்படுகின்றது.

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்மக்களின் வாக்கெடுப்பில் வெற்றிகொண்டது உலகத்திற்கு எடுத்துகாட்டாக அமைந்தது தலைவர் அவர்களின் போராட்டத்தின் மூலம் நாங்கள் முன்னெடுத்தாலும் அது உலகத்தினாலும் காட்டிக்கொடுப்பினாலும் நாங்கள் மௌனிக்கப்பட்டோம் ஆனால் மீண்டும் நாங்கள் எழுந்துகொண்டிருக்கின்றோம்.

எமது மக்களை ஒன்று திரட்டவேண்டும் என்ற எண்ணத்தில் செந்தில் குமரன் தீக்குளித்துள்ளார்.செந்தில் குமரன் தெளிவாக முடிவெடுத்துவிட்டார் எமது மக்களை தமிழீழ விடுதலை நோக்கி உன்னிப்பாக தள்ளவேண்டும் என்கின்ற முடிவினை அவர் எடுத்துவிட்டார்.நாங்கள் எல்லோரும் ஒருமுகமாக எங்களால் இயன்றளவு அதிகூடிய நிலையில் உதவிகைள செய்வோமாக இருந்தால் எமது நிறைவான போரட்டம்என்பது அது வீரியத்துடன் முன்னெடுக்கப்படும் எல்லாம் எங்கள் கையில்தான் இருக்கின்றது.

இன்று 25பேர்வரையில் இவ்வாறாக தங்கள் உயிரினை கொடுத்துள்ளார்கள் உறுதியானவர்கள் நிதானமானவர்களக எங்களை ஆக்கிக்கொண்டு செயல்திட்டத்துடன் நாங்கள் எமது வேலைகளை முன்னெடுக்கவேண்டும் உலகம் எப்போது எதிராகத்தான் வேலைசெய்யும்.எம்மைபிரிதது புலம்பெயர்ந்தவர்களை மட்டம்தட்டுவது விடுதலைபுலிகளையும் தேசியதலைவரையும் குறைகூறுவது நவநீதம் பிள்ளையின் திட்டத்தில் இருக்கின்றது. செந்தில்குமரனுக்கு இதனை நன்கு புரிந்திருக்கின்றது.

நாங்கள் சோர்வடையாமல் ஒன்றுபட்டு செயற்திட்டங்களை வகுத்து ஒன்றுபட்ட நிலையில் சிந்தித்து செயற்படுத்த இருக்கின்றோம் என்பதில்தான் வெற்றி இருக்கின்றது.நாங்கள் புலம்பெயர்ந்த மக்கள் நாங்கள் உறுதுணையாக எங்கள் பணியினை செய்யவேண்டும் என்று தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.