கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திற்கு எதிரான மனு: சம்பந்தனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

15

எதிர்வரும் ஒக்டோபர் 2ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுள்ளது. குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டின் அரசியல் யாப்பிற்கு முரணானது என தெரிவித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மனு தாக்கல் செய்தார். குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இரா.சம்பந்தனுக்கு இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.

முந்தைய செய்திகூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட மிகவும் வலிமையானது – கே.பி.
அடுத்த செய்தியாழில் வேட்பாளர்கள் மீது தாக்குதல்: முச்சக்கர வண்டி எரித்து சாம்பலாக்கப்பட்டது!