இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது! – கொல்கத்தாவில் இலங்கைத் தூதர் தகவல்

50

இலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணும் செயல்முறைகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் மற்றும் அவர்களின் பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு தூதர் கரியவாசம் தெரிவித்துள்ளார். இந்திய மகா போதி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஓன்றில் பங்கேற்க வந்திருந்த கரியவாசம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தற்போது அமைதி திரும்பி வருவதாக தெரிவித்தார். தமிழ்மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கும், அவர்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார். தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குற்றஞ்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் வழங்கும் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும் என்றும் கூறினார்.

முந்தைய செய்திசெம்மொழி மாநாட்டில் 200 கோடி ரூபா ஊழல்! – கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீது விசாரணை.
அடுத்த செய்திதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்