இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையிடம் ஐ.நா தோல்வியடைந்துவிட்டது! – பான் கீ மூன்

10

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையிடம் தோல்வியடைந்து விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 68 ஆவது கூட்டத்தொட்ரில், பொதுவிவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில், ஐ.நா அமைப்பு ரீதியாக தோல்வியை தழுவியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.