இந்தியாவும் கனடாவும் மட்டுமே அமர்வுகளில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்தவில்லை

9

சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்கு அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவும் கனடாவும் மட்டுமே அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்றும் உறுதிப்படுத்தவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், ஏனைய நாடுகள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதனை உறுதி செய்துள்ளன. இதுவேளை, சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்வது குறித்தும் அமர்வுகள் குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் நிபந்தனைகளை விதித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறீலங்காவின் கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நோக்குடன் பொதுநலவாய அமர்வுகளை மேற்கொள்ளுமாறும் எமது நாட்டின் தனித்தன்மையினை வெளிக்காட்டும் முகமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி ஏற்பாட்டுக் குழுவினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திஇரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம்
அடுத்த செய்திநவநீதம்பிள்ளையை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர் பாதர் யோகேஸ்வரவரனக்கு எதிராக துண்டுப்பிரசூரம்