வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

44

வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் (10.06.2013)

 

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக்கூட்டம் 10.06.2013திங்கள் அன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கி இரவு 10.00 மணி வரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்களின் தலைமயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 

இக்கூட்டத்தை வீரபாண்டி ஒன்றியத்தைச் சார்ந்த சீவரத்தினம்(ஜீவா) அவர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். மே-18 அன்று அறிமுகமான சீவரத்தினம் அவர்கள், மே-18ல் நடந்த காவல்துறையின் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் கண்டு மனம் நொந்து கடந்த 20 நாட்காளில் எழுச்சியும் புரட்சியும் மிக்க 50க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒன்று திரட்டி இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீவரத்தினம் அவர்களுக்கு வாழ்த்துச்சொல்ல – 8754102652.

 

இக்கூட்டமானது ஒன்றிய கலந்தாய்வுக்கூட்டம் போல் இல்லாமல் மாவட்ட கலந்தாய்வுக்கூட்டம் போல மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் கடந்த 08.06.2013 காரிக்கிழமை(சனி) அன்று சென்னையில் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசபட்ட,

 

௧. கட்சியின் கட்டமைப்பை உருவாக்குதல்.

௨. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்ட, ஒன்றிய,நகர, கிளை

பொறுப்பாளர்களை பரிந்துரை செய்தல்.

௩. நாம் தமிழர் இதழை பரவாலக கொண்டு சென்று மக்கள் மத்தியிலே பரப்புரை செய்தல்

௪. 1000 பேர் 1000 ௦ரூபாய் என்னும் கட்சியின் வளர்ச்சி நிதிதிட்டம் குறித்தும்

௫. அண்ணனின் பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் குறித்தும்.

௬. வீரபாண்டி ஒன்றிய செயல்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து களமாடுவது குறித்தும்

௭. நமது தேசிய தலைவர் அவர்களின் புகைப்படத்தை கட்டாயம் வாகனங்களில் போட வேண்டும் என்றும்

௮. வாகனங்களில் எண் பலகைகள் தமிழில் போட வேண்டும் என்பது குறித்தும் மிக விரிவாக கலந்தாலோசித்து பேசப்பட்டது.

 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர்கள்:

சீவரத்தினம்(ஜீவா), பூபதி (பெரியபுத்தூர்),முருகேசன் (கல்பாரபட்டி), கமலகண்ணன் (சித்தர்கோயில்), ரஞ்சித் (சித்தர்கோயில்), சிவா(ஆட்டையாம்பட்டி),ராசா (வழக்குரைஞர்), ரமேசு (எடப்பாடி), சீராளன் (எடப்பாடி), செயப்பிரகாசு, மணி (களரம்பட்டி),பாலசுப்பிரமணி, அண்ணாதுரை (மேட்டுத்தானம்பட்டி), மணி (பள்ளபட்டி), இணையம் சிவா, ரமேசு(அன்னதானபபட்டி), வினோத்குமார் பணமரத்துப்பட்டி, கோபிராசா, பழனிவேல், ரமேசு,சங்கர், மணிகண்டன், சிவா (ஓட்டுனர்), சுப்பிரமணி(ஓட்டுனர்), முருகன் அர.மூலப்பாதை,பா.சுப்பிரமணி, அருள்குமார், சின்னுராசு, சேகர், கார்த்தி, சீனிவாசன், மணிகண்டன்,மணி(சமத்துவபுரம்), கார்த்திகேயன், பாலா (எட்டிமாணிக்கம்பட்டி) ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திமாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம்
அடுத்த செய்திவிருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் பொதுகூட்டம் – 22.06.2013