மன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா.

284

திருவாரூர் தெற்கு மாவட்டம்-மன்னார்குடியில் மே நாளை முன்னிட்டு, மன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா நடைபெற்றது.சங்கத்தின் மாவட்ட செயலர் ஆ.அரிகரன்,துணை செயலர் ச.கார்த்திகேயன்,மன்னை நகர செயலர் மு.கணேசன்,துணை செயலர் கோ.நாகராசன்,நீடாமங்கலம் ஒன்றிய செயலர் சி.தர்மராசன்,கட்சியின் மாவட்ட செயலர் மருத்துவர் இரா.பாரதிசெல்வன்,இணை செயலர் வழக்குரைஞர் வீரக்குமாரவேலன்  மற்றும் நாம்தமிழர் தம்பிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்.மண்டல ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி நல்லதுரை, தொழிலாளர் நலச்சங்க கொடியை ,இந்தியவில் முதன்முறையாக 1923 ம் ஆண்டு சென்னை கடற்கரையில் மே நாள் விழா கொண்டாடிய பெருந்தமிழர் சிங்காரவேலர் நினைவு கொடிமரத்தில் ஏற்றி புரட்சி உரை ஆற்றினார்.