சேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டம்

99

சேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டம்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை 2016 உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறுஎன்ற தலைப்பில் பொதுக்கூட்டம் 21.04.2013 ஞாயிறு அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

      இக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்கள் தலைமையேற்க எழுச்சி முழக்கம் கல்யாண சுந்தரம், பேராவூரணி திலீபன், ஆகியோர் எழுச்சியுரையாற்றினார்கள். இப்பொதுக்கூட்டத்தினை பாரப்பட்டி சுதாகர் ஓமலூர் ரமேசு மற்றும் அப்பகுதியைச் சார்ந்த நாம் தமிழர் கட்சி உறவுகளும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இப்பொதுக்கூட்டத்தில் ஆரம்ப நிகழ்வாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான தப்பாட்டம் (பறையாட்டம்) நடைபெற்றது. இதனை அடுத்து நம் இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈத்த மாவீர்களுக்கு அகவணக்கங்களும் வீரவணக்கங்களும் செலுத்தப்பட்டது. சாதியாகவும் மதமாகவும் பிரிந்து கிடக்கும் நம் உறவுகளின் மனதில் “நாம் தமிழர்” என்னும் இன உணர்வு பதியும் வகையில் நாம்தமிழர் கட்சியின் உறுதிமொழி ஏற்கப்பட்டு, இதனைத்தொடர்ந்து தமிழர்த்தந்தை சி.பா. ஆதித்தனார் பெற்றெடுத்த நல்ல தமிழில் நாளிதழ் நடத்திய தினத்தந்தி அதிபர் எங்கள் அய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. பெரும் எழுச்சியோடும் மக்கள் திரட்ச்சியோடும் இனிதே இப்பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் மகளிர் பாசறை ஜானகி, இரா. சந்திரசேகர், ஆ.பசுபதி, கோ. ஆனந்தன், பெ. சுப்பிரமணி காமலாபுரம் செல்வராசு, பஞ்சுகாளிபட்டி நல்லா, சாகிர் அம்மாபாளையம் ராசன், பள்ளப்பட்டி சிவக்குமார், இணையம் சிவக்குமார், பள்ளப்பட்டி மணி, வம்சி தங்கதுரை, செல்வமணிகண்டன், அம்மாபேட்டை பன்னீர்செல்வம், அம்மாபேட்டை கண்ணன், களரம்பட்டி அன்பழகன், களரம்பட்டி மணி, அன்னதானப்பட்டி பன்னீர், பணமரத்துப்பட்டி வினோத், பாலசுப்பிரமணியம், தங்கவேல், செயந்தன், சித்தர்கோவில் மதி, இளம்பிள்ளை பாரதி, கொங்கணாபுரம் வணங்காமுடி, எடப்பாடி ரமேசு, வெங்கடேசு, பிரதீப், கோவிந்தசாமி, நங்கவள்ளி மணிகண்டன், குஞ்சாண்டியூர் பொன்னுசாமி (எ) சுரேசு, மேச்சேரி செல்வராசு, மல்லியகுந்தம் சதா, தொலசம்பட்டி முருகவேல், மேட்டூர் மணிவேல், கண்ணன், துரைசாமி, குளத்தூர் வழக்குரைஞர் ராசா, மாங்காடு சான், பாலவாடி சக்திவேல், வாழப்பாடி ரமேசு, தம்மம்பட்டி சரவணன், பெத்தநாயக்கன்பாளையம், காசிமன்னன், வச்ரவேல், அருள்ராம், கெங்கவள்ளி ரமேசு, ஓமலூர் பகுதி சக்தி, தமிழ்ச்செல்வன், வடிவேல், ரமேசு, சின்னமணி மாதையன், சரவணன், பழனிச்சாமி ஆறுமுகம், சண்முகம் செல்வம் வெங்கடேசு, கண்ணன், ராசா, மணி, வரதராசன், செல்வராசன், சீனி, சுந்தரம், பிரபாகரன், தங்கதுரை, மணிகண்டன், அன்பரசன், மனிராசு, கண்ணன், சண்முகம், கார்மேகம், பிரபாகரன், கந்தசாமி, வானவில் சரவணன், சக்திவேல், கிட்லர், செகதீசன், சந்திரசேகர், இலக்கியத்தமிழன், பார்த்திபன், செல்வராசு, குமரேசன், இரஞ்சித், அ.வெங்கடேசு, க.வெங்கடேசு, பிரகாசு, பிரபாகரன், சுரேசு, பழனிச்சாமி, சதீஷ், மதியழகன் செல்வம், தமிழ், இராசா, சதீசுகுமார், பழனிச்சாமி, சூர்யபிரகாசு, சிவா, இராசவிசி, மாயகண்ணன், மதி, இல.விசயகாந்து, மாதேசு, இராசபாண்டி, பார்த்திபன், இரஞ்சித்து, வெற்றிவேல், முரளி, ராமசந்திரன், சுரேசு ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்துகொண்டார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை முன்வைத்து இப்பொதுகூட்டம்  நடைபெற்றது.

தீர்மானங்கள்

Ø ஓமலூர் பேருந்து நிலையத்திலுள்ள மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Ø  ஓமலூர் பேருராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர், சுகாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் எந்த வித கட்சி பாகுபாடும் இன்றி செய்து முடிக்கவேண்டும்.

Ø  ஓமலூரில் இருந்து சங்ககிரி வரை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தினால்  பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து இத்திட்டத்தை நிறைவேற்றப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Ø  ஓமலூர் பேருந்து நிலைய வணிக வழக்கத்தில் 2009-10 ஆம் ஆண்டு சுமார் 20 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளில் மாற்றுத்திரனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு படி  ஒரு கடையை ஒதுக்கப்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Ø  ஓமலூர் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் நலனுக்காக ஒதுக்கபட்ட நிதியை முறையே பயன்படுத்த வேண்டும். தற்போது வறட்சி நிலவுவதால் போர்கால அடிப்படையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Ø  ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைத்திருந்த தோல்பதனிடும் இடத்தை சுகாதாரம் கருதி அப்புறப்படுதியதை நாம் தமிழர் வரவேற்கிறது. ஆனால் மேற்படி தோல் பதனிடுவதற்கு ஒதுக்குபுறத்தில் அதற்குரிய இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Ø  ஓமலூர் பேரூராட்சியில் இருசக்கர வாகனம் நிறுத்தப்படும் வணிக வளாக கடை அருகில் 7 கடைகள் 2008-09 ஆம்  ஆண்டு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப் படவில்லை. மாறாக அன்று முதல் இன்றுவரை சமூக விரோத செயல்கள் செய்வதற்கு அந்த கடைகளை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே உடனடியாக ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இக்கட்டிடத்தை உரிய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப் பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Ø  ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் 5-வது பிரிவில் (வார்டு) சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Ø  ஓமலூர் அருகில் உள்ள சுங்க சாவடியை அகற்றி 60 கி.மீ. க்கு ஒரு சுங்க சாவடி என்ற விகிதத்தில் முறையான இடத்தில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலே கொடுக்கப்பட்ட இத்தீர்மானங்களை நாம் தமிழர் கட்சி ஒருமித்த கருத்தோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.