ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”

40

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இனப் படுகொலைச் செய்த சிங்கள இனவெறி அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கவும்… பன்னாட்டு விசாரணை நடத்திடவும்… தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்திடவும்… இந்திய அரசு வலியுறுத்த கோரியும்… அதற்கான மாணவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்களும் போராட்டக் களத்திற்கு வரவேண்டும் என்ற நிலையிலும் தமிழகப் பெண்கள் செயற்களம் 19-03-2013 அன்று மாலை 7.15 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையத்திலிருந்து டில்லிக்கு செல்லும் ஜிடி விரைவு தொடர்வண்டியை மறித்து போராட்டம் நடத்தினர்.

தமிழகப் பெண்கள் செயற்கள ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமையிலான பெண்கள் அனைவரும் தொடர்வண்டி புறப்படும் நேரத்தில் காவல்துறையின் தடையை மீறி தண்டவாளத்தில் அமர்ந்து எழுச்சி முழக்கமிட்டவாறே மறியல் செய்தனர். அவர்களுக்கு உறுதுணையாக பொதுமக்களும் முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் செயற்கள பொறுப்பாளர்கள் மங்கை, அரசி, தமிழ்ச்செல்வி, யாழினி ஆகியோரும் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி இ.வே.சீர்த்தி, தனக்கு அடுத்த நாள் தேர்வு இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் பங்கேற்று துணிவுடன் காவல்துறையை எதிர்த்து நின்றதோடு, தமிழின உணர்வோடு முழக்கமிட்டது அனைவரையும் வியப்படையச் செய்தது.

இப்போராட்டத்தில் பங்கேற்க வந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்து தொடர்வண்டித் துறை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து… மறியலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து விடுவித்தவுடன், மாநகர காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது. இப்போராட்டத்தால் தொடர்வண்டி 30 நிமிடம் நேரம் கடந்து புறப்பட்டது.

முந்தைய செய்திமாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நியூசிலாந்து இளையோர் அமைப்பு போராட்டம்
அடுத்த செய்திதிருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக 20.03.2013 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம்