திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நாம்தமிழர் பொதுக்கூட்டம்

86

திருவாரூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் சார்பில் 24.03.2013 அன்று, முத்துப்பேட்டையில், இராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரியும்,இன எதிரி காங்கிரசை யும், இன துரோகி தி.மு.க வையும் கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.பகுதி செயலாளர் செல்வம்,மாவட்ட துணை செயலர் முத்துக்குமார்,இணைசெயலர் சட்டத்தரணி வீரக்குமாரவேலன்,மாவட்ட செயலர் மருத்துவர் பாரதிசெல்வன்,மாணவர் பாசறை சந்தோஷ், இடும்பாவனம் கார்த்திக்,தஞ்சை தெற்கு மாவட்ட செயலர் பழ.சக்திவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி நல்லதுரை ,மாநில பரப்புரையாளர் பேராவூரணி திலீபன் உரையாற்றினர்.திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.மதச் சண்டைகள் அடிக்கடி நடைபெறும் இவ்வூரில் பொதுக்கூட்டத்திற்கு பிறகு சுமார் முப்பது பேர் கட்சியில் உறுப்பினராகச் சேர விருப்பக்கடிதம் அளித்தனர்.