23-06-2012 அன்று மதுரையில் நடந்த நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுத் திருவிழா.. (ஒளிப்படங்கள் இணைப்பு )

50

நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் 23 – 06 – 2012 காரிக்கிழமை(சனி) அன்று மதுரை அரசரடி யு.சி. பள்ளி திடலில் ” தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா ” வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.. விழாவில் பழந்தமிழர் கலைகளான தமிழிசை,கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய தமிழர் கலைகள் அனைத்தும் நிகழ்த்தப்பட்டன.. திரைப்பட இயக்குனர் இகோரின் “மீட்கப்பட்ட தாய் நாடகம்” திரைப்பட இயக்குனர் ஐகோவின் “கருப்புகுரல் நடன நிகழ்ச்சி” புதுவை சித்தன் ஜெயமூர்த்தியின் “இன எழிச்சிபாடல்கள்” சிதம்பரம் சிறிமுட்லூர் தெய்வநாயகம் “கிராமிய எழுச்சிப்பாடல்கள்” கருமாத்தூர் புதிய திசைகளின் “முல்லை பெரியாறு நாடகம்” விடுதலை நடவு கலைக்குழுவின் “கிராமிய நிகழ்ச்சி” என விழா தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு சிறப்புக்களை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது..

விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீட்பு உரையாற்றினார்

சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் இரா.க.செல்வமணி இயக்குனர் அமீர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்..

ஒளிப்படங்களை காண படத்தின் மீது சொடுக்கவும்

முந்தைய செய்திமதுரை – கலை இலக்கிய விழா ஒளிப்படம் 23-06-2012
அடுத்த செய்திகாணொளி பரப்புரை – திருவள்ளூர் 24-06-2012