நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

312

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம் கடந்த 15.04.2012 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.தென்றல் மணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வழக்கறிஞர் இரா.இராசசேகரன், இரா.அருண்குமார், ம.சோசப், விருத்தாசலம் நகர ஒருங்கினைப்பாளர்கள் முரளிதரன், விவேக், மாணவர் பாசறை ஒருங்கிணப்பாளர் நித்யானந்தம், விருத்தாசலம் ஒன்றிய ஒருங்கிணப்பாளர் சேகர், பொன்னாடம் நகர ஒருங்கிணைப்பாளர் சோதிவேல், ரமேசு, திட்டக்குடி நகர ஒருங்கிணைப்பாளர் பேரின்பம், நெய்வேலியைச் சேர்ந்த புலவர் சாரங்கபாணி, சின்னா, அன்புச்செல்வன் மற்றும் சம்புலிங்கம், அறிவழகன், கணேசு, தமிழ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், தானே புயலால் பாதித்த கடலூர் மாவட்டத்தை பேரிடர் பகுதியாக அல்லது பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் மின்தடையை போக்க நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்கவேண்டும், கூடங்குளம் அணு உலையால் ஏற்படும் இன்னல்களை கூறி தொடர்ச்சியாக சனநாயக வழியில் போராடிய அப்பகுதி மக்கள் மீதும், அணு உலை எதிர்பாளர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உடனே திரும்ப பெறவேண்டும், விருத்தச்சலத்தை சுற்றி உள்ள விவசாயிகளின் நலன் கருதி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும், மே மாதம் 13ஆம் நாள் விருதாச்சலத்தில் நடைபெற உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொள்ள இருப்பதால் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முந்தைய செய்திஈழத்தமிழர்களின் உண்மை நிலையறிய ஐ.நா. குழு செல்ல வேண்டும்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம்