போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – நிழற்படங்கள் இணைப்பு !!

15

சிறிலங்காவிற்கு எதிரான போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது..

திருச்சி மத்திய ரயில்நிலையத்திற்கு முன்பாக உள்ள காதிகிராப்ட் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகளான சாகுல்அமீது கலைக்கோட்டுதயம் தடா சந்திரசேகர் அய்யநாதன் அன்புத்தென்னரசு சிவகுமார் வழக்கறிஞர் நல்லதுரை வெற்றிக்குமரன் தலீபன் பேராசிரியர் கல்யாணசுந்தரம் பிரபு துரைமுருகன் தாமரைமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக முன்னெடுத்திருந்தார்கள்.

“இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மழுப்பலான பதிலை உண்மைத் தமிழர்கள் நம்பப்போவதுமில்லை ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை எனக் கூறிய செந்தமிழன் சீமான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் வாழ்வதா தனித் தமிழீழத்தை அமைத்து தனியாக சுதந்திரமாக வாழ்வதா என்பதை ஈழத்தமிழர்களே தீர்மாணிக்கும் உரிமையினை வழங்கும் விதமாக பொதுசன வாக்கெடுப்பினை நடாத்த சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும்” எனக் கூறினார்.

சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்டுள்ள போர்குற்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழர்களது மனஉணர்வை வெளிப்படுத்தவும் திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காலை 9மணிக்கு ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் செந்தமிழன் சீமானின் எழுச்சி உரையுடன் மாலை 7மணியளவில் முடிவடைந்தது. இதில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

முந்தைய செய்திஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஉலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!