“நீதியைத் தேடி ஐ.நா. நோக்கி”: திருச்சி மாநகரில் நாம் தமிழர் கட்சியின் பதாகை – நிழற்படங்கள் இணைப்பு!!

12

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை வலியுறுத்தி, மனித குலப்பகைவன் இராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டும், உள்ளிட்ட ஐந்து அம்சகோரிக்கையை வலியுறுத்தி பல இலட்சம் கையெழுத்துகள் நிரப்பி, ஐ.நா. மனித உரிமைச் செயலாளர் நவிநீதம் பிள்ளைக்கு, தமிழகத்திலிருந்து, தமிழின உணர்வாளர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் வழி அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சுழலில் நீதியைத் தேடி ஐ.நா. நோக்கி என்ற வாசகம் பொறித்தப் பதாகையை நாம் தமிழர் கட்சி திருச்சி மாநாகரின் எல்லா இடங்களிலும் அமைத்திருந்ததை பொது மக்கள், உணர்வாளர்கள் என அனைவரும் பார்வையிட்டு தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனர்.

நன்றி: நாம் தமிழர் கட்சி – திருச்சி மாட்ட கிளை